தாயாரின் புதிய காதலுக்கு வாழ்த்து தெரிவித்த நெய்மார்!

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (11:28 IST)
தனது தாயாரின் புதிய காதலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நெய்மார் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டில் தற்போதைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரம் என்றால் பிரேசிலின் நெய்மார்தான். மிக இளம் வயதிலேயே அதிகமாக சம்பாதிக்கும் வீரராக உருவாகியுள்ள நெய்மாரின் பக்குவமான செயல் ஒன்று அவருக்கு மேலும் பாராட்டுகளைப் பெற்று தந்துள்ளது.

நெய்மாரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே மற்றும் தாயார் தாயார் நடின் கான்கேல்வ்ஸ்.நெய்மாரின் தாய் தந்தை இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர். இதையடுத்து 52 வயதாகும் நெய்மரின் தாயார் நடினுக்கும் 22 வயதான இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் தனது காதலனுடன்  இருக்கும் புகைப்படத்தை நடின் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த புகைப்படம் வைரல் ஆக, அதில் ’மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட அனைவரும் நெய்மரின் இந்த முதிர்ச்சியான செயலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்