ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (17:22 IST)
ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி 155 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் அணிக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.
 
மொயின் அலி 48 ரன்களும், அம்பத்தி ராயுடு 27 ரன்களும் ஜடேஜா 23 ரன்களும் எடுத்து உள்ளனர். இதனை அடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்