உலகக்கோப்பையில் பிரான்ஸ் வெற்றி: மொரோக்கோ ரசிகர்கள் 120 பேர் கைது!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (18:07 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று பிரான்ஸ் அணியை மொரோக்கோ அணியை வீழ்த்தியது என்பதும் இதனை அடுத்து பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் மொரோக்கோ தோல்வி அடைந்ததும் பிரான்சில் உள்ள மொரோக்கோ  ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது
 
இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 120 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கலவரம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதால் 5,000 போலீசார் பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எதிர்பார்த்தது போலவே பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும் பல்வேறு இடங்களில் மொரோக்கோ  ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்