முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளும் அதன் சிறப்புகளும்...!

Webdunia
முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர். சரவணபவ என்ற  முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.
 
சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்.
 
1. திருபரங்குன்றம்: இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
 
2. திருச்செந்தூர்: இங்கு முருகப்பெருமான கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.
 
3. பழனி: ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
 
4. சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
 
5. திருத்தணி: குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.
 
6. பழமுதிர்ச்சோலை: இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் நீராடுதல் சிறப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்