வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாத படங்கள் எவை தெரியுமா...?

Webdunia
வீட்டின் பூஜை அறையில் வைக்கும் சாமி படங்களில் சில சாஸ்திரங்கள் உள்ளன. இந்த செய்தி தொகுப்பில் வீட்டின் பூஜை அறையில் எந்த சாமி படங்கள் வைக்கக்கூடாது என்று விரிவாக பார்க்கலாம்.
வீட்டின் பூஜை அறையில் இறந்த முன்னோர்களின் படங்களை சாமிக்கு நிகராக வைக்க கூடாது. முன்னோர்களின் படங்களை தனியாக தான்  வைக்க வேண்டும்.
 
சனீஸ்வரர் படங்கள் வீட்டில் வைக்கக்கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது. சக்தியின் உருவத்துடன்  இல்லாத நடராஜரின் படத்தை வீட்டில் வைத்து வழிபட கூடாது.
 
கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி பகவானின் படங்களை பூஜையில் வைத்து வணங்க கூடாது. தனித்த காளி படத்தை  பூஜையில் வைத்து வணங்க கூடாது.
 
கால கண்டன் படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது. தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருக பகவானின் படத்தை வீட்டில்  வைக்க கூடாது.
 
ருத்ர தாண்டவ நிலையிலும், கொடூர பார்வையுடனும், தவ நிலையில் உள்ளதும், தலைவிரி கோலத்திலும் உள்ள அம்பிகை படங்களை  இல்லத்தில் உள்ள பூஜை அறையில் வைக்க கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்