வாஸ்துப்படி பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும்....?

பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தனமை நம்மிடம் பனத்தைத் தங்கிடச் செய்யும்.
வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து  இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும்  சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.
 
பூச்சித்தொல்லை கொசுக்கள் உள்ளே வருமென்றால், நைலான் வலை போட்டுக்கொள்ளலாம். வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும்  ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு  மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.
 
பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும்.
 
பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.
 
பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய்  நோட்டாக வையுங்கள்.
 
பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள். பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.(பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு  வைக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்