அதிர்ஷ்டத்திற்கும் உதவும் சாமி படங்களான ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளேயோ அல்லது நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது நன்மையை தரும். வெளியே செல்லும்போது சட்டைப் பையில் எடுத்து செல்வதன் மூலம் செல்லும் காரியம் வெற்றியோடு முடியும்.
வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம், வெற்றி, தனலாபம் போன்றவை அதிகரிக்கும்.
அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய்துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.