கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் எது?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (10:01 IST)
இன்று கார்த்திகை தீப பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்கள் தீபம் ஏற்ற ஆயத்தமாகி வருகின்றனர்.



தெய்வங்களில் அருள் ஒளியை அள்ளி தருவது தீப ஒளி. தினசரி வீடுகளில் தீபம் ஏற்றினாலும் கார்த்திகையில் ஏற்றப்படும் தீபமானது பல்வேறு சிறப்புகளை கொண்டது. தீபம் ஏற்றும் முன் காலை வேளையிலேயே வீட்டை சுத்தப்படுத்தி விட வேண்டும்.

மாலையில் நீராடி, வாசலில் கோலமிட்டு தயார் செய்தல் வேண்டும். தீபம் ஏற்றுகையில் குத்து விளக்கை பயன்படுத்தலாம். அரிசி மாவு கோலத்தின் நடுவே குத்து விளக்கை வைத்து, அதை சுற்றி அகல் தீபங்களை ஏற்றலாம். குறைந்த பட்சமாக 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகமானது. அதற்கு மேலும் ஏற்றலாம்.

இன்று கார்த்திகையில் கௌரி நல்ல நேரம் மாலை 3 மணியளவிலேயே வருகிறது. என்றாலும் இன்று முழுவதும் நல்ல நாள்தான் என்பதால் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படும் நேரத்திலேயே வீடுகளில் தீபங்களை ஏற்றலாம்.

தீபம் ஏற்றிவிட்டு தெய்வங்களை வணங்கிவிட்டு கார்த்திகை தீபத்தின் சிறப்பு வாய்ந்த தெய்வங்களான சிவபெருமான், முருகபெருமானை மனதில் வேண்டி திருவாசகம், சிவமந்திரம், கந்த சஷ்டி கவசம், போற்றி மந்திரங்களை துதிப்பது மேலும் நலம் சேர்க்கும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்