பரணி தீபம் ஐந்து தீபங்களாக காட்டப்படுவது ஏன்??

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (08:40 IST)
அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் குறித்த விவரங்கள் இதோ…


தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா குறிப்பாக திருவண்ணாமலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். கார்த்திகை 20 ஆம் நாளான இன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். திருக்கார்த்திகையை ஒட்டி, அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபம் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்…

பரணி தீபம்: அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்படும். பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் ‘பரணி தீபம்’ என்று பெயர் பெற்றது.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமகவே ஐந்து தீபங்களாக பரணி தீபம் காட்டப்படுகிறது. இதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்