பெண்களின் சபரிமலையில் பொங்கல் திருவிழா!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (13:28 IST)
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் வைக்கும் விழாவில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா மிக பிரசித்தமானது.

இந்த விழாவின் போது பகவதி அம்மன் திருக்கோவிலில் குவியும் பெண்கள் திரளாக பல இடங்களில் பொங்கல் வைத்து அம்மனை வழிப்படுவது வழக்கம். மாசி மாதத்தில் நடைபெறும் இந்த பொங்கலிடும் திருவிழாவில் கலந்து கொள்ள கேரள பெண்கள் மட்டுமல்லாது தமிழக பெண்களும் ஆயிரக்கணக்கில் செல்கின்றனர்.

இந்த முறை கொரோனா அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை கோவில் நிர்வாகமும், காவல் துறையும் ஏற்படுத்தியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்