உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலிலும் கூட வட இந்திய பகுதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ள போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும் பாதுகாப்பான முறையில் ஹோலி கொண்டாடவும் அறிவுறுத்தியிருந்தார்.