”மாநில அரசு செய்தது அநியாயத்தின் உச்சம்”.. வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Arun Prasath

திங்கள், 9 மார்ச் 2020 (15:26 IST)
சிஏஏ போராட்டக்காரர்களின் புகைப்படங்களை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம் என அலகாபாத் நீதிமன்றம் உத்திர பிரதேச அரசை கண்டித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ, ஹஸ்ரத்கஞ் போன்ற ஊர்களின் முக்கிய சாலைகளிலும், அம்மாநில சட்டப்பேரவை முன்பும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் புகைப்படங்களையும் முகவரிகளையும் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. இது மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அறிவுறுத்தலின் படியே வைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. அப்போது ”போராட்டக்காரர்களின் புகைப்படத்தை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம், இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என தனது கண்டனங்களை தெரிவித்தது.

எனினும் ”பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் புகைப்படங்கள் தான் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுதல் முறையல்ல, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் நிகழக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டுள்ளது” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்