'இளைஞர் எழுச்சி மாநாடு' பணிகள் இறுதிக்கட்டம் -அமைச்சர் உதயநிதி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (20:02 IST)
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அந்த மாநாடு டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து திமுக இளைஞரணி சமீபத்தில்  வெளியிட்ட அறிவிப்பில் ‘ 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநாட்டினை தொடர்ந்து வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஒரு வார காலத்திற்கு இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 25 நான்காம் தேதி நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக இளைஞர் அணியுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘’நம் திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு சேலத்தில் வரும் 24ஆம் தேதி மாபெரும் எழுச்சியோடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இளைஞர் அணி மாநாட்டுக்கான பணிகளில் ஒன்றாக, விளையாட்டு - அறிவியல் - விவசாயம் - கலை என பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் இளைஞர்கள் - இளம்பெண்களுடன் இன்றைய தினம் கலந்துரையாடினோம்.

இளைஞர்களின் முன்னேற்றம் தொடர்பாக அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பெற்று, நாமும் அவர்களுடன் கலந்துரையாடினோம்.

இந்த சிறப்புக்குரிய சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் அன்பும் - நன்றியும். ‘’என்று தெரிவித்துள்ளார். #கழக_இளைஞரணி_மாநாடு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்