இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக, சேலத்தில் விமான சேவை நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் சேலத்தில் இருந்து விமானம் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு - சேலம் - கொச்சி வழித் தடத்தில் விமானம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் முதல் விமானம் பெங்களூருவில் இருந்து நேற்று மதியம் சேலம் விமான நிலையத்துக்கு வந்தது.
அதேபோல் சேலத்தில் இருந்து கொச்சிக்கு விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் ஆட்சியர் கார்மேகம், எம்பி., பார்த்திபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.