மருத்துவமனைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (20:15 IST)
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  மேட்டூர் , தொட்டில் பட்டியில் வசித்து வருபவர் ரகு(28). இவர தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ரகுவிற்கும்,  நட்டா மங்களம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், வெள்ளையன், தெர்மல்  ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில்,  நேற்று முன் தினம்  இரவு ரகுவை கத்தியால் மூவரும் குத்தியுள்ளனர். எனவே  மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர்.

அப்போது, பின் தொடர்ந்து வந்த மூவரும், மருத்துவமனைக்குள் புகுந்து ரகுவை வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். கொலை செய்த பிரகாஷ், வெள்ளையன், தெர்மல் உள்ளிட்ட   4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்