இளையோர்களுக்கான குத்துச்சண்டை போட்டி..3 பேர் தங்க பதக்கம் வென்று சாதனை

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (21:29 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற யுத் நேஷ்னல் பாக்ஸிங் சாம்பியன் ஷிப் என்கின்ற தேசிய அளவிலான இளையோர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டை சார்ந்த கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேர்  தங்க பதக்கம் வென்று சாதனை – கரூரில் அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்லூரியில் உள்ள விளையாட்டு வீரர்கள் சார்பில் உற்சாக வரவேற்றனர்.

இந்திய அளவில் யுத் நேஷ்னல் பாக்ஸிங் சாம்பியன் ஷிப் என்கின்ற தேசிய அளவிலான இளையோர்களுக்கான குத்துச்சண்டை போட்டி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் யூத் பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா என்கின்ற அமைப்பு சார்பில் நடைபெற்றது. கடந்த 16, 17, 18 ஆகிய மூன்று தேதிகளில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் கரூர் அரசுகலைக்கல்லூரி மாணவர் சுடலை 65 கிலோ பிரிவிலும், சுகாஷ் 55 கிலோ எடை பிரிவிலும், பாலசுப்பிரமணி 60 கிலோ பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

மேலும், அரசுக்கலைகல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள் பெற்ற இந்த தங்கப்பதக்கம் அனைவரின் பாராட்டு பெற்ற நிலையில், இன்று கரூர் வருகை தந்த அந்த மாணவர்களை கரூர் அரசுகலைக்கல்லூரி சார்பிலும், கல்லூரியில் உள்ள விளையாட்டு வீரர்கள் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூர் அரசுகலைக்கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியினை கரூர் அரசு கலைக்கல்லூரியிலும் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கரூர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் கெளசல்யா தேவி மற்றும் பேராசியர்கள், பேராசிரியைகள் ஏராளமானோர் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்