கரூர் அரசுகலைக்கல்லூரியில் விளையாட்டு போட்டி

திங்கள், 4 மார்ச் 2019 (20:33 IST)
கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில், அந்த கல்லூரியின் துறைகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் 25 ம் தேதி முதல் துவங்கி வரும்  7 ம் தேதி வரையில் நடைபெறுகின்றது. 
இந்த அரசு கலைக்கல்லுரியானது., தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரியில்,. துறைகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் 15 துறைகள் கலந்து கொண்டு விளையாண்டு வருகின்றன. முதல் போட்டியாக கபாடி போட்டி ஆண்களுக்கான கபாடி போட்டி கடந்த 25 ம் தேதி நடைபெற்றது.
 
 அதன் பின்னர் கிரிக்கெட் போட்டியும், கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் மைதானத்தில் இன்று நான்காவது போட்டிகளாக மாணவர்களுக்கான கோ – கோ துவங்கி நடைபெற்று வருகின்றது. நாளை மாணவிகளுக்கான கோ- கோ போட்டியானது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 15 அணிகள் பங்கேற்று விளையாண்டு வருகின்றன. 
 
முற்றிலும் நாக் அவுட் முறையில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் அரையிறுதி மற்றும் பைனல் நாளை மாலை இரவு வரை நடைபெற உள்ள நிலையில், நாளை மாலைக்குள் அரையிறுதியில் வென்ற அணிகள் பைனலுக்கு தேர்வாக உள்ளனர். இந்த போட்டியினை கல்லூரியின் முதல்வர் (பொ) ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். 
 
இதற்கான முழு ஏற்பாடுகளையும், உடற்கல்வி இயக்குநர் முனைவர் க.ராஜேந்திரன் ஏற்பாடு செய்து வருகின்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்