டியூசன் செண்டர் பெயரில் ‘காம களியாட்டம்’ ஆடிய வாலிபர்கள் - 30 மாணவிகளிடம் உல்லாசம்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (21:59 IST)
டியூசன் செண்டரில் படித்த பள்ளி மாணவிகளுக்கு மயக்க மருத்து உல்லாசம் அனுபவித்த வாலிபரையும், அவருக்கு உதவிய 2 வாலிபரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (25), ஈஸ்வரன் (26), சிவக்குமார் (27). நண்பர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளனர்.

அந்த டியூசன் சென்டரில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் டியூசன் படிக்க சேர்ந்தனர். சென்டர் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு சிவக்குமார் என்பவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். மேலும், மாணவிகளுக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லி கொடுப்பது போல் அவர்களிடம் நெருங்கிய பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாணவிகளுக்கு குளிர்பானங்களை அடிக்கடி வாங்கி கொடுத்துள்ளார். இதில் சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர்களிடம் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனை செல்போன்களில் வீடியோவாகவும் எடுத்து தனது மற்ற இரு நண்பர்களிடமும் காண்பித்துள்ளார்.

இதுபோன்று சந்தரப்பம் வாய்க்கும் போதெல்லாம் போது மாணவிகளை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். மறுக்கும் மாணவிகளிடம் ஏற்கனவே சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட விடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து மற்ற இரண்டு வாலிபர்களும், அந்த ஆபாச வீடியோவை காட்டி மாறி, மாறி உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால் மாணவிகள் இது குறித்து வெளியில் சொல்ல பயந்து அவர்களின் களியாட்டத்திற்கு அடிபணிந்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் அரங்கேறியுள்ளது.

இதுபோன்று டியூசன் செண்டருக்கு படிக்க வந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக காவல்துறை தரப்பினர் கூறியுள்ளனர். தற்போது மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
அடுத்த கட்டுரையில்