CM- யை என் ஊருக்கு வந்து கொரோனாவை கண்ணுல காட்ட சொலுங்க - போலீசிடம் சட்டம் பேசும் இளைஞர்!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (11:40 IST)
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் போலீசாரிடம் சட்டம் பேசிய இளைஞர்.. பின்னர் நடந்தது என்னவென்று பாருங்கள்....

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால், ஒரு சில பொது மக்கள் அதனை சரியாக பின்பற்றாமல். வைரஸின் தாக்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாகனங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தி அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அப்படிதான் அறந்தாங்கியில் வெளியே கேட்பாரின்றி சுற்றித்திரிந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார் அவரை வீட்டுக்கு செல்லுபடி அறிவுறுத்தினார். ஆனால், அந்த நபரோ " கொரோனான்னு எதுமே இல்லை CM- யை என் கோட்டைக்கு வந்து கொரோனாவை என் கண்ணுல காட்ட சொல்லுங்க என போலீசிடம் சவடாலாக பேசினார். பின்னர் அந்த  இளைஞரை குண்டுக்கட்டாக ஸ்டேஷனுக்கு தூக்கிச்சென்று சென்று தடியால் அடித்து உதைக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்