தனது புத்தகத்தின் தலைப்பு உள்ளிட்டவற்றை காப்பி அடித்து மோசடி செய்துள்ளதாக எழுத்தாளர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சி புலியகுளத்தைச் சேர்ந்தவர் ஆ.வெங்கடாசலம். இவர், கடந்த 2013ஆம் ஆண்டு ’திருவள்ளுவனாரின் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே சமயம் கடந்த மார்ச் 5ஆம் தேதி தா.பாண்டியன் ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்ற பெயரில் வெளியிட்ட புத்தகம் வெளியிட்டுள்ளார்.
இதில், வெங்கடாசலம் எழுதியுள்ள புத்தகத்தின் கருத்துகள், எழுத்து நடைமுறை ஆகியவற்றை சிறிது மாற்றி அமைத்து தா.பாண்டியன் தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இது குறித்து வெங்கடாசலம், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புத்தக உரிமம் தொடர்பாக, தா.பாண்டியன் மீது புகார் அளித்துள்ளார். மேலும், தா.பாண்டியன் மீது புத்தகத்தை காப்பி அடித்து எழுதும் திருட்டு வழக்கைத் தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.