டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜக 48 இடங்களை வென்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 தொகுதிகள் தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவு குறித்து முதல்வர் அதிஷி தெரிவிக்கும்போது, "எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்கள் மற்றும் என் கட்சித் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். சர்வாதிகாரம், குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகியவற்றிற்கு எதிரான போர் தொடரும்.