பணத்துக்கு பதில் ஆபாச வீடியோ, போட்டோ... ஷாக்கான கடன்காரன்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (19:12 IST)
வாங்கிய கடனை திருப்பி கேட்டதற்கு பணத்திற்கு பதைல் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி வைத்த இளம்பெண் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
ராமநாதபுரம், மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிவாசகம். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுடன் இரண்டரை லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். 
 
ஆனால் பல நாட்களாகியும் பிரீத்தி வாங்கிய கடனை அடைக்காமல் இருந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் பொருமை இழந்த பழனிவாசகம் பிரீத்தியுடம் கடனை அடைக்கும் படி கேட்டுள்ளார். 
 
பிரீத்தியோ கடனை அடைக்க பணத்தை கொடுப்பதர்கு பதில் அவரது ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் பழனிவாசகத்திற்கு அனுப்பியுள்ளார். 
 
இதனால் பழனிவாசகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பிரீத்தி தன்னிடம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும், ஆனால் கடனை திருப்பிக் கேட்ட போதெல்லாம் ஆபாச புகைப்படங்களையும், குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வீடியோக்களையும் அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதனையடுத்து போலீஸார் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்