3 பேரோடு வாழ்ந்த பெண்- குழந்தை யாருடையது எனக் குழப்பம் !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (08:26 IST)
ராமநாதபுரத்தில் ஒரு பெண் 3 பேரைத் திருமணம் செய்த நிலையில் நான்காவதாக ஒருவர் வந்து குழந்தைக்கு சொந்தம் கொண்டாடியதால் குழப்பம் ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் கோரவள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 8 மாதக் குழந்தையை விற்றுவிட்டதாக சரத் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், அந்தப் பெண்ணையும் குழந்தையையும் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அந்தபெண்ணின் கதையைக் கேட்ட அதிகாரிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர்.

அந்த பெண்ணுக்கும் ஒரு நபருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் பெண்ணுக்கு வினோத் என்ற நபருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்ததால் அவரது முதல் கணவர் விவாகரத்து செய்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து வினோத்தோடு சேர்ந்து வாழ்ந்துள்ளார் அந்த பெண். சில மாதங்களில் வினோத் வெளிநாடு சென்று வேலைப்பார்த்துக் கொண்டு இருக்கும்போது அங்கேயே இறந்துவிட்டார்.

இதனால் அந்த பெண் மூன்றாவதாக ஒரு மாற்றுத்திறனாளியை மணந்து கொண்டுள்ளார். இப்போதுதான் பிறந்த குழந்தையை வினோத்தின் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் வினோத் வெளிநாடு சென்ற போது அந்த பெண்ணுக்கும் தனக்கும் தொட்ரபு ஏற்பட்டதாகவும் அதன் மூலம் பிறந்ததே இந்தக் குழந்தை என்று சரத் என்பவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அதிகாரிகள் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு டி என் ஏ சோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்