ரஜினியின் அரசியல் தர்பாரால்’ அழியுமா கட்சிகள் ? பொன்.ராதா ’சாபம்’ இட காரணம் என்ன ?

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (17:10 IST)
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டிரம்ப் வருவது குறித்து உலக அரசியல் பார்வையாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்களோ இல்லையோ, ஆனால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தன் அரசியல் வருகையை ரஜினிகாந்த் உறுதி செய்து, தனது ரசிகர்களை உசுப்பேற்றினார். அதனால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அவரது அறிவிப்பு சிறிது கலக்கமாகவே பார்க்கப்பட்டது.
 
ஆனால், இப்போது அரசியல் தலைவர்கள் , ரஜினி வந்தாலும் சரி,வரலீனாகும் சரி ஆகட்டும் பார்த்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.
 
அரசியல் தலைவர்கள் யாரை (ரஜினி ) பற்றி பேசி வருகிறார்களோ அவரே இதுகுறித்து கவலைப்படவில்லை. தனது வேலையை மட்டும் கருத்துடன் பார்த்து வருவாய் ஈட்டி வருகிறார். ரசிகர்களின் உசுப்பேற்றலுக்கும், அரசியல் தலைகளின் சீண்டலுக்கும் அவர் செவிசாய்ப்பதில்லை. அதுதான் அவரது வெற்றிக்கு காரணம்! ஆனால் அவரைப் பற்றி பேசி வருபவர்கள்தன் மண்டையைக் குழப்பி பொழுதை வீணடித்து மீடியாக்களுக்கு தீனி கொடுக்கிறார்கள்.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் , முன்னாள் எம்பியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது :
 
நடிகர் ரஜினி கட்சி தொடங்கினாலும், தனிக்கட்சி தொடங்கினாலும் மற்ற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமென தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே,ரஜினி பாஜகவுக்கு வரவேண்டுமென அக்கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கமலைபோல் திட்டவட்டமாக ரஜினி  தனது முடிவை  தெரிவிக்கவில்லை; என்றாலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில்  ’டைரக்ட்டா சிம் போஸ்டுக்கே ’குறிவைக்கிறார்.

அதனால் தமிழகத்தில் திக்கு முக்காடிவரும் பாஜக, இங்கு அரசியலில்  தன்னைப் பலமாகக் காலூன்ற ஒரு பிரபலத்தின் துணையைத் தேடி வருகிறது. அதனால் ’ரஜினியை டார்கெட் செய்தே பேசி, மோடியின் செல்வாக்கை வைத்து அவரது கவனத்தை கவர்ந்திழுக்கவும் பாஜகவினர் முயன்று,  வருவதாகவும், அதற்காக மற்ற கட்சிகளை ஒதுக்கித் தள்ளி வருவது  போன்று பாவ்லா காட்டுவதாகவும்’ அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால், பாஜகவினரின் டீலுக்கு ரஜினி ஒத்துவரனுமே என்பதான் இதில் சுவாரஸ்யமே !இனிமேலாவது ரஜினி வாய் திறப்பாறா என பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்