எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்புக்கு திமுக காரணமா? பரபரப்பு தகவல்..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (15:07 IST)
எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூலை 13,14ஆம் தேதிகளில் நடைபெற இருந்த நிலையில் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மேகதாது விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தில் இருப்பதால் பெங்களூரில் கூட்டம் நடத்துவதை திமுக விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே காவிரி பிரச்சனையில் தமிழக மற்றும் கர்நாடகா இடையே பெரும் கருத்து வேறுபாடு இருந்து அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அதை முடித்து வைத்தது. 
 
இந்த நிலையில் தற்போது மேகதாதுவில் அணை கட்டிய தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது 
 
இந்த நிலையில் பெங்களூரில் கூட்டம் நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் திமுக எதிர்ப்பு அடுத்து இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்