பெங்களூருவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..

திங்கள், 3 ஜூலை 2023 (14:33 IST)
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற இருந்த எதிர்கட்சிகள் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்பதும் இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இதனை அடுத்து சிம்லாவில் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. 
 
இந்த நிலையில் பெங்களூரில் வரும் 13, 14 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
பெங்களூரில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்