கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை எதற்கு.? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி..!

Senthil Velan
சனி, 22 ஜூன் 2024 (13:23 IST)
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையான விசாரணை நடத்துவதாகவும், சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் மெத்தனால் என்கிற ரசாயன கலவையைக் கலந்த கலவையைக் குடித்ததால், அங்குள்ள மக்களில் 52-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது விரும்பத்தகாத செயல் என்றார்.
 
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை மறைக்கவே  சட்டமன்றத்தில் ஏதாவது பிரச்சினையைக் கிளப்ப வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும் எடப்பாடி கூறுவது அப்பட்டமான பொய் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்
 
கள்ளக்குறிச்சி மரண விவகாரத்தில், உடனடியாக சிபிசிஐடி விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒருநபர் ஆணைய விசாரணைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக அவர் சுட்டி காட்டினார். சிபிஐ விசாரணைக்கு மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, எதற்கு சிபிஐ விசாரணை என கேள்வி எழுப்பினார். 

ALSO READ: ஒய்எஸ்ஆர் கட்டிடம் இடிப்பு..! பழிவாங்கும் அரசியல்..! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் பாய்ச்சல்..!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதல்வராக இருந்த எடப்பாடி மறைக்கப் பார்த்ததால், திமுக சிபிஐ விசாரணை கேட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்