குமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சீட் கிடையாதா? முந்தும் அண்ணாமலை ஆதரவாளர்..!

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:57 IST)
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் ஒருமுறை மத்திய அமைச்சராகவும் இருந்து உள்ள நிலையில்  இந்த முறை அவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுவது பாஜக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் கன்னியாகுமரி தொகுதி மட்டும் பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது.  கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில்  இந்த தேர்தலிலும் அவரே போட்டியிடுகிறார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் வசந்துக்கு எதிராக பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டால் மட்டுமே கன்னியாகுமரி தொகுதியை பாஜக  கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியை பெற அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ஜவான் ஐயப்பன் என்பவர் முயற்சி செய்து வருவதாகவும்  கிட்டத்தட்ட அவருக்கு அந்த தொகுதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொன்னார் தரப்பினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சீனியர் தலைவர்கள் அண்ணாமலையிடம்  கருத்து வேறுபாடுடன் இருக்கும் நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த பட்டியலில் சேர்ந்து விடுவாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்