அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார்? தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (08:07 IST)
தமிழகத்தில் இருந்து காலியான 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நேற்று திமுக தனது இரண்டு வேட்பாளர்களை அறிவித்தது. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வில்சன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். மீதி ஒரு தொகுதி மதிமுகவுக்கு வழங்கப்படுகிறது
 
அதேபோல் மக்களவை தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாமகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்கும் அதிமுக, மீதி இரண்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.
 
அதிமுகவில் இருந்து மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், அன்வர் ராஜா,  மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ஆகியோர்கள் வேட்பாளராக பரிசீலனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் தம்பித்துரை மற்றும் மைத்ரேயன் ஆகிய இருவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது
 
இந்த நிலையில் பாமகவின் தரப்பில் இருந்து அன்புமணி அல்லது அவரது மனைவி செளம்யா ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்