12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? சீமான்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (14:05 IST)
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? என  நாம் தமிழ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே?

55 ஆண்டுகள் திராவிடக் கட்சிகளின் சமூக நீதி ஆட்சிக் காலத்தில்தான் பெருமள்வு பஞ்சமி நிலங்கள் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை மீட்கத் தமிழ் நாடு அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகல் என்ன மீட்டுக் கொடுத்த நிலங்கள் எவ்வளவு?

பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு அமைத்த குழுக்கள் என்னவானது? பஞ்சமி நிலங்கள் மீட்பது தொடர்பாக ஏற்கனவே ஆண்டவர்களும், இப்போது ஆள்பவர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் என யாருமே வாய் திறக்க மறுப்பது ஏன்? எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்