பரோலுக்கும் ஜாமினுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:37 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வகித்து வந்த பேரறிவாளனுக்கு கடந்த சில மாதங்களாக பரோல் கிடைத்து வந்தது என்பது தெரிந்ததே.
 
 இந்த நிலையில் தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  இந்த நிலையில் பரோல் மற்றும் ஜாமீன் ஆகிய இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை பார்க்கலாம் .
 
பரோல் என்பது மாநில அரசு தன்னுடைய விருப்பத்தின் பெயரில் தருவது. காலம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த பரோல் கடும் கட்டுப்பாடுகளை கொண்டது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் பரோல் பெற்றவர் எதையும் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் அவர் பின்னால் போலீஸ் பாதுகாப்புடன் செல்லும். கிட்டத்தட்ட வீட்டு சிறையில் இருப்பது போன்று தான் பரோல் என்பது குறிப்பிடத்தக்கது .
 
ஆனால் ஜாமீன் என்பது பரோலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, எந்த போலீஸ் பந்தோபஸ்து தேவையில்லாதது மற்றும் ஜாமீன் பெற்ற அவர் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்