பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

திங்கள், 21 பிப்ரவரி 2022 (19:24 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் ஏற்கனவே பரோலில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பேரறிவாளனுக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் மேலும் ஒரு மாதம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது
 
இந்த வேண்டுகோளை அடுத்து தொடர் சிகிச்சைக்காக மேலும் ஒரு மாதம் பேரறிவாளனுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்