மழை எப்படி? டிசம்பர் மாதம் ஆபத்து ஏதேனும் இருக்கா? வெதர்மேன் கணிப்பு!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (10:32 IST)
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் போக போக மழையை காணவில்லை. 
 
மழை இல்லாமல் இருந்த போதுதான் கஜா புயல் தாக்கியது, இந்த புயல் பாதிப்பில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதம் வந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் மழை எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். 
 
அதன்படி, டிசம்பர் 3, 4 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிக்கை அனுப்பியுள்ளது. 
 
அதில் புதிய கிழக்கு திசை காற்று தமிழகம் மற்றும் புதுவையில் கடக்கவுள்ளது. இதன் காரணமாக வரும் 3, 4 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. 
இதோடு டிசம்பர் மாதம் வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அவ்வாறு பெய்தால்தான் சென்னையில் கோடையை சமாளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏனெனில், சென்னையை பொருத்த வரை 619 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 321 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 48% குறைவு என்பதால் கோடை சமாளிக்க சென்னையில் மழை பெய்தே ஆக வேண்டும். ஆனால், சென்னையில் மழைக்கு வாய்ப்புகள் குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்