வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி? மழை குறையுமா? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

Prasanth Karthick
வியாழன், 12 டிசம்பர் 2024 (09:48 IST)

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகளும் முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்பதால் மக்களிடையே சற்று கலக்கம் இருந்து வந்தது.

 

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்