வங்க கடலில் உருவாகும் தற்காலிக புயல்? கரை கடக்கும் முன்னர் என்ன நடக்கும்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Prasanth Karthick

வியாழன், 28 நவம்பர் 2024 (15:47 IST)

வங்க கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருவாகாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வரும் நிலையில், அது நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாழ்வு மண்டலம் நகர்வது நின்றதாலும், வேகம் குறைந்ததாலும் இன்று இரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் புயலாக உருவாகும் என்றும், மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைய சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை அதிகாலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெற உள்ளது. அதன் பின்னர் மீண்டும் வலுக் குறைந்து நாளை மறுநாள் 30ம் தேதி காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்