கொலையாளிகளை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவி உறுதி: பாலி கண்காணிப்பாளர் தீபக் பார்கவ்

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (10:03 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டத்தில் நகைக்கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னையை சேர்ந்த காவல்துறை அதிகாரி பெரியபாண்டி இன்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் கொலை செய்யப்பட்ட பெரியபாண்டியின் குடும்பத்தினர்களுக்கு நேரில் சென்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் கூறினார்

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தமிழக காவல் ஆய்வாளரை கொலை செய்த ராம்புரா கொள்ளையர்களை பிடிக்க தமிழக காவல்துறைக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் தமிழக காவல் ஆய்வாளரை சுட்டு கொலை செய்த சம்பவத்தின் விசாரணையை தொடங்கிவிட்டதாகவும் பாலி மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் பேட்டியளித்துள்ளார்

மேலும் ராம்புரா பகுதியில் இருக்கும் கொள்ளையர்களை முற்றிலும் பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்