குடிகாரர்களால் நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம் - பெண்கள் வேதனை!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (07:05 IST)
பல்வேறு இடங்களில் மதுபான கடைகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலேயே அமையப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். குடும்ப பெண்கள் மதுக்கடையினாலும் அங்கு வரும் நபர்களாலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். 
 
இது குறித்து லங்கா கார்னர் பகுதி பெண்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்  தங்களது சிரமம் குறித்து தகவலாக கூறியதாவது  மது அருந்திவிட்டு பலரும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இல்லங்களுக்கு முன்பே மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றது. 
 
சில சமயங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண்கள்  வெளியில் நடமாட முடிவதில்லை எனவும் பல நேரங்களில் நாங்கள் வெளியிலேயே காவலுக்கு இருப்பது போல் இருக்கின்றோம். 
 
ஆட்கள் இல்லை எனில் வீட்டின் முன்பே இயற்கை உபாதைகளை கழித்து நாசம் செய்கின்றனர். 
இவர்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.  நிம்மதியாக வெளியில் சென்று வர முடிவதில்லை.  இதனை தட்டி கேட்டால் குடிபோதையில் தங்கள் இழிவாக பேசுகிறார்கள். 
 
குடிப்பவர்களால் தாங்கள் அருகில் உள்ள மளிகை கடைக்கு கூட சென்று வர பயமாக உள்ளது எனவும் இங்குள்ள மதுபான கடை இரவு பகல் என எல்லா நேரமும் இயங்கி வருகிறது இதனால் எந்நேரமும் இங்கு குடிப்பவர்கள் வந்து செல்கிறார்கள். 
 
இரவு நேரங்களில் ரகளைகளில் ஈடுபடுவதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவ்வப்போது தங்களின் சிரமங்களை சமாளித்துக் கொள்கின்றனர் எனவும் இப்பிரச்சனைகள் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனுவாக வழங்கி உள்ளதாகவும் இருந்தும்  எந்தவித மாற்றமும் ஏற்படாத நிலையில் முழுமையாக நாங்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனையை மாவட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர்  கவனத்தில் எடுத்துக் கொண்டு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்