தேர்தல் அலுவலகத்திற்குள் விஷால் உள்ளிருப்பு போராட்டம்.

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:53 IST)
விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சற்றுமுன்னர் நிராகரித்த நிலையில் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

தன்னை முன்மொழிந்த இருவர் மிரட்டப்பட்டதாகவும், இதற்கு சிசிடிவி ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், மிரட்டியவர்கள் அதிமுகவினர் என்றும் விஷால் தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

ஆனாலும் தேர்தல் அதிகாரி இதை ஏற்றுக்கொள்ளாததால் விஷால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் போராட்டம் நடத்தி வருகிறார் இதனால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்