வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

Prasanth Karthick

வெள்ளி, 28 மார்ச் 2025 (08:54 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அவரது கட்சி தேர்தல் ஆணையத்தாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது நடைமுறை.

 

அதன்படி இன்று தவெக பொதுக்குழு கூட்டம் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்சென்ஷன் மையத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை வகித்து நடத்தும் நிலையில் பல முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் வாசிக்கப்பட உள்ளது.

 

இந்நிலையில் விஜய், புஸ்ஸி ஆனந்தை வரவேற்று தவெகவினர் பல இடங்களிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் தவெக நிர்வாகி ஈசிஆர் சரவணன் ஒட்டிய போஸ்டரில் “மதிப்புமிகு தளபதி அவர்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான் தவெக பொதுச்செயலாளர் வருங்கால தமிழக முதல் அமைச்சரே வருக வருக” என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனால் இந்த போஸ்டரை தான் ஒட்டவில்லை என மறுத்துள்ள தவெக நிர்வாகி ஈசிஆர் சரவணன், இது வேறு கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்த செய்யும் காரியம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்