இந்த ஆண்டில், 12,480 பள்ளிகளில் பயிலும் 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272 சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் என மொத்தம் 9,13,036 பேர் எழுத உள்ளனர். இவர்களில் 15,729 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் கட்டுப்பாட்டிற்குள் நடைபெற வேண்டும் என்பதற்காக 48,426 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 4,858 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் சிரமமின்றி எழுதுவதற்காக காற்றோட்டமான அறைகள், குடிநீர், கழிப்பறைகள், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.