தமிழக அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் மகளிர்களை பேருந்துகளில் ஏற்றுவது இல்லை என்றும் பல இடங்களில் பேருந்துகள் மகளிரை பார்த்ததும் நிற்காமல் சென்று கொண்டிருப்பதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கின்ற.
அந்த வகையில் விருதுநகரில் இன்று பெண்கள் கூட்டமாக பேருந்துக்கு காத்திருந்த நிலையில் பெண்களை கண்டதும் நிறுத்தாமல் அதிவேகமாக அரசு பேருந்து சென்றதை எடுத்து பெண்கள் விரட்டி அந்த பேருந்தை பிடித்து வழிமறித்தனர்.
மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பெண்கள் எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விருதுநகரில் நடந்த இந்த சம்பவத்தில் பெண்கள் ஆத்திரத்துடன் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரிடமும் இது என்ன உங்கள் வீட்டு சொத்தா? அரசு பேருந்து தானே, ஏன் பெண்களை கண்டால் வண்டியில் ஏற்ற மாட்டீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளையும் பேருந்துகளில் ஏற்றாமல் நிற்காமல் சென்று கொண்டு இருப்பதாக பல புகார்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.