மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், ஆந்திரம், பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்ததோடு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழகம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, சிவசேனை(உத்தவ் அணி), திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பதாகைகளுடன் முழக்கமிட்டனர்.