வாக்களிக்க தவறிய விஜயகாந்த் !

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (09:22 IST)
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் வாக்களித்த நிலையில் விஜயகாந்த் ஓட்டளிக்க வரவில்லை. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னணி சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். நடிகர் தனுஷ் தான் நடிக்கும் க்ரே மேன் படப்பிடிப்புக்காக தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. 
 
இதே போல தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி பள்ளியில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் வாக்களித்த நிலையில் விஜயகாந்த் ஓட்டளிக்க வரவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்