மகன் என ராதிகா கூறியதற்கு விஜய பிரபாகரனின் ரியாக்சன்.. நச் பதில்..!

Siva
புதன், 27 மார்ச் 2024 (08:05 IST)
நடிகை ராதிகா மற்றும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகிய இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் சமீபத்தில் ராதிகா செய்தியாளர்களை சந்தித்தபோது விஜயபிரபாகரன் எனது மகன் போன்றவர், எனது மகளுடன் படித்தவர் என்று கூறி சின்ன பையன் அவர் நன்றாக இருக்கட்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த விஜய பிரபாகரன் ’ராதிகா அவர்கள் சொல்வது உண்மைதான், அவருடைய மகள் என்னுடைய வகுப்பில் தான் படித்தார், ராதிகா எனக்கு அம்மா மாதிரி தான், அதில் எந்த தப்பும் இல்லை, ராதிகா மட்டுமின்றி விருதுநகர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் எனக்கு அம்மா மாதிரி தான், எனவே எனக்கு அம்மாவாக இருக்கும் அனைவரும் எனக்கு இந்த தொகுதியில் ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று நச் என்று பதில் அளித்தார்.

மேலும் எங்கள் விருதுநகர் தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று கேப்டன் நினைத்திருந்தது பல இன்னும் நனவாகவில்லை. அதை எல்லாம் நனவாக்க என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் இந்த தொகுதியில் ஏர்போர்ட் உட்பட பல நல்ல விஷயங்களை கொண்டு வருவேன் என்று தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்