வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் நிலை என்ன?

Siva
புதன், 27 மார்ச் 2024 (07:23 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று வேட்புமனு  தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் உட்பட சில வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் முதலில் சுயேச்சை வேட்பாளர்களும் அதன் பின் அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று மாலை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால் இன்றைய நாளில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் சில சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நேற்று மாலை தான் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் சில காங்கிரஸ் வேட்பாளர்களும் இதுவரை தாக்கல் செய்யாத நிலையில் இன்று அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்