விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து இல்லை.. ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து: விஜய்யின் ஓரவஞ்சனை

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (11:13 IST)
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ள நிலையில் இந்து பண்டிகைகளான தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாதவர் அண்டை மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார் என கமெண்ட்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் இதுவரை ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்து வருகிறார் என்பதும் இதுவரை ஒரு பொதுக்கூட்டமோ செய்தியாளர் சந்திப்போ அல்லது கட்சி குறித்த எந்த ஒரு கொள்கையையோ பேசவில்லை.

அவ்வப்போது மறைந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளுக்கு ட்வீட் செய்து வரும் விஜய் ஒரு சில பண்டிகைகளை மட்டும் தேர்வு செய்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத விஜய் இன்று ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுகிறார்.

ஓணம் பண்டிகை வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது: மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #ஓணம் நல்வாழ்த்துக்கள்!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்