77 இல்ல 110 பேர் வெற்றி... கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (12:41 IST)
விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் 110 பேர் வெற்றிபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக பல முக்கிய தமிழக கட்சிகளும் போட்டியிட்ட நிலையில், முதன்முறையாக விஜய் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். 
 
ஆம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியினர். இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் வெற்றியடைந்துள்ளனர். 
 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 110 பேர் வெற்றிபெற்றதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் 110 பேர் வெற்றிபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்