எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (07:47 IST)
நேற்று பெரியார் நினைவு நாள் மற்றும் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரியார் நினைவு நாளுக்கு மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு,  எம்ஜிஆருக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது எஸ்ளத்தில் கூறியிருப்பதாவது:
 
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......???
பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் திரு.விஜய்  அவர்கள் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர்  திரு.எம்.ஜி.ஆர்  அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...?
 
டெல்லியில்... பிரதமர் அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள்  பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்....
 
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா ? இது ஒரு சாமானியனின் கேள்வி ?
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்