எம்ஜிஆர் மலை என்றால் மோடி..? இருவரையும் ஒப்பிடுவதா? - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

Prasanth Karthick

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (15:11 IST)

இன்று எம்ஜிஆர் நினைவு நாளில் அறிக்கை வெளியிட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எம்ஜிஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்தாபகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்ஜிஆர் நினைவு நாளில் அவரை போற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடியையும், எம்ஜிஆரையும் ஒப்பிட்டு அவர் பேசியிருந்தார்.

 

இன்று மெரினா கடற்கரையிம் எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆரையும், மோடியையும் ஒப்பிட்டு பேசவே முடியாது என காட்டமாக பேசியுள்ளார்.

 

அவர் பேசும்போது “எந்த நிலையில் இந்த ஒப்பீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. எம்ஜிஆரையும், மோடியையும் ஒப்பிட்டு பேசுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை கொண்டது. அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்