விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய பிரிவு தொடக்கம்: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (13:38 IST)
விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக பிரிவாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த புதிய பிரிவு தொடங்குவது குறித்து சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
 
இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது புதிய அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் மாவட்ட வாரியாக வழக்கறிஞர் பிரிவு தொடங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்